உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு மருத்துவர்களும் இரவு பகலாக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் குறித்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற புதிய வழிமுறை எனும் பெயரில் பொய் பித்தலாட்ட நோய் ஒன்று பரவி வருகிறது.
புனித குரானுக்குள் இரட்டை தலை முடி காணப்படுவதாகவும் அதை எடுத்து கழுவி குடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறலாமென்றும் எங்கோ ஒரு பித்தலாட்டகாரன் ஆரம்பித்து விட்ட வதந்தியை நம்பி பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் இரவு,பகலாக முடி தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரணமக, வீடுகளில் கறிச்சட்டிக்குள்ளும், சோற்றுப்பானைக்குள்ளும் எவ்வாறு முடி விழுகிறதோ அவ்வாறே சிறுவர்கள், பெரியோர்கள் குரான் ஓதும்போது முடி விழும்.
பொலித்தீன் கவர் செய்யப்பட்ட புத்தம் புது குரானை கொண்டு வந்து பிரித்து தேடும்போதும் அதனுள்ளே முடி விழவே செய்யும்.
மனிதர்களின் ஈமானை(இறை விசுவாசத்தை) சோதனைக்குள்ளாக்க முடியை காண்பிப்பது ஷாத்தானுக்கு ஒன்றும் பெரிய செயல் கிடையாது.
NOTE:
இது போன்ற பொய்யான பித்தலாட்டங்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும், புனித குரானிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாக கூறுகிறோம்.
இத்தகையை செயல் புனித மார்க்கத்தை நேசிக்கின்றவரின் இறைநம்பிக்கையை பாழ்படுத்தும் ஷைத்தானிய செயலாகும்.
(ஈமானை இழக்கும் செயலாகும்)
நோய் என்பது இறைவனால் இறக்கப்பட்ட ஒன்றாகும், எந்தவொரு நோய்க்கும் அதன் மருந்தை படைக்காமல் இறைவன் அனுப்புவதில்லை என்பதே இறைநியதியாகும்.
நோய்க்குரிய மருந்தும், இறைவனின் நாட்டமும் ஒன்று சேர்ந்து விட்டால் அந்த நோய் நீங்கிவிடும்.
புனித குரானில் சில நோய்களுக்கு “ஓதிப்பார்த்தல்” உண்டு.
ஆனால் அதற்குள் முடி தேடுதல் அல்லது கரைத்து குடித்தல் என்பது இல்லை.
முழு மனித சமுதாயத்திற்கும் நேர்வழியுடன், இறைவனின் ஆற்றல்களை, அத்தாட்சிகளை வெளிப்படுத்தும் மாபெரும் பொக்கிஷமாகவே புனித குரான் திகழ்கிறது.
அதனுள்ளே பொதிந்து கிடக்கும் மகா அதிசயங்களையும், இறைவனின் வல்லமை, ஆற்றல்களையும் ஆராய்ந்து பார்க்குமாறு புனித குரான் உபதேசிக்கிறதே தவிர, தலை முடியை தேட சொல்லி அது சொல்லவில்லை.
வெறுமனே இதுபோன்ற அடிமட்ட சிந்தனைகளுக்கும், வழிகெட்ட செயல்களுக்கும் புனித குரான் ஒருபோதும் வழிகாட்டவில்லை.
மேலதிக தெளிவுகளுக்கு உங்கள் அருகாமையிலுள்ள #உலமாக்களிடம் சென்று ஆலோசனை பெறுங்கள் அல்லது #ஜம்மியத்துல் உலமாவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
புனித மார்க்கத்தையும், புனித குரானையும் மலினப்படுத்துகின்ற இதுபோன்ற அடிமட்ட பித்தலாட்ட சிந்தனைகளிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெறவேண்டும்.

Post a Comment
Post a Comment