சிவப்பு எச்சரிக்கை




கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இலங்கையின் மூன்று மாவட்டங்கள் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவான மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பாரிய தடையாக அமைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மூன்று மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரும் வரையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் அத்தியாவசியமான பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் வகையிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.