#ST.Jamaldeen.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 41 வயதான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உத்தியோகத்தர் இன்று காலை 10 மணியளவில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள நிலையில், 11.30 அளவில் பாலமுனை வயல் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது ஜனாசா சற்று முன்னர், பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment