(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மையமாகக்கொண்டு செயற்படும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
வரலாறு காணாத வகையிலான கடும் வறட்சியால் நுவரெலியா மற்றும் அதனை அண்டியப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டெவோன், சென்கிளயார், லக்ஸ்ஸபான, ரம்பொடை, எபடீன் உட்பட மேலும் சில நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் சடுதியாக குறைவடைந்துள்ளால் அப்பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மதிய வேளைகளில் கடும் உஷ்ணம் நிலவுவதால் நுவரெலியாவிலுள்ள ரம்மியமான காட்சிகளை தம்மால் மகிழ்ச்சியாக பார்க்க முடியாமல் இருப்பதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணம் காரணமாக நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரும்பாலானவர்கள், பெரும்பாலான நேரத்தை ஹோட்டல் அறைகளிலேயே செலவிடுகின்றனர் என்றும், சில பயணிகள் இலங்கைக்கான சுற்றுலாவை பிற்போட்டுள்ளனர் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment
Post a Comment