Eastren Cancer Care Hospice #கிழக்கு புற்று நோய் பராமரிப்பு இல்லம்




 Basheer Abdul Kaiyoom.

கொடையாளர்களின் 70 Million ரூபாய் செலவில் கடந்த இரண்டாண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட கிழக்கு புற்று நோய் பராமரிப்பு இல்லம் (Eastren Cancer Care Hospice) ஏறாவூரில் (04-02-2020) திறந்து வைக்கப்பட்டது.



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் வைத்திய நிபுணர் Dr.A.Iqbal அவர்களின் அயராத முயற்சியினாலும், தனவந்தர்களின் நிதி உதவியினாலும் இது சாத்தியமாகியுள்ளது.



புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



கடுமையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பிந்திய நிலையை அடைந்து வாழ்நாளின் இறுதித் தருணங்களை ஏக்கத்தோடு கழிக்கும் நோயாளர்களுக்கும், அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் சேவை வழங்குதல் இதன் நோக்கமாகும்.
முழு இலங்கையிலுமுள்ள புற்று நோயாளர்களும் அவர்களது பராமரிப்பளாளர்களும் இதன் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பல கொடையாளிகளும், பல பிரதேசங்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார் Jammiya Naleemiya கலாபீடப் பிரதிப்பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உப தலைவருமான Assequ A.C.Agar Mohamed Sir அவர்கள்.


புற்று நோயாளர்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் நல்வாழ்வு வசதிகளை வழங்குதல்.
சிகிச்சைக்காக மிக நீண்ட தூரப்பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு வரும் புற்று நோயாளர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதி.
புற்று விழிப்புணர்வு திட்டங்கள், தொடர்ச்சியான சுகாதாரப் போதனைகள், மற்றும் திரையிடல் பரிசோதனைகள்.
உளவள ஆலோசனைகள், மற்றும் ஆன்மீக வழிகாட்டல்கள்.
போக்குவரத்துக்கான Ambulance வசதிகள்
போன்ற சேவைகள் இங்கே வழங்கப்படுகின்றன. எந்த விதக்கட்டணமும் அறவிடாமல்இங்கு அனைத்து சேவைகளும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.