(க.கிஷாந்தன்)
மலையகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான மாபெரும் சித்திரக் கண்காட்சி, பத்தனை ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் (12.02.2020) அன்று ஆரம்பமானது.
கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், அட்டன் கல்வி வலயத்தின் உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
'முகவரி வர்ணப்பிரவாகம்' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த சித்திரக் கண்காட்சியை, தமிழ்ப் பிரிவு மாணவர்களே ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பாலேயே மலையகத் தமிழர்களின் வாழ்வியல் ஓவியங்களாக காட்சியளிக்கின்றன.
நாளையும் (13, நாளை மறுதினமும் (14) முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை காண வரலாம் என விழா ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
Post a Comment
Post a Comment