ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக,முறைப்பாடு




முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இன்று (13) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் அமெரிக்க வங்கி கணக்கிற்கு சட்டவிரோதமான பணவைப்பு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் அப்போதைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக அமெரிக்க வங்கி கணக்கிற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிட்டுள்ளதாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.