அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் அன்பும் பண்பும் கொண்ட கற்றறிந்த சட்டத்தரணிகள், அவர்களின் துணை கொண்டுதான் இந்த மக்களுக்கு குறுகிய காலத்தில் பணிபுரிய முடிந்ததாக, இன்றைய பிரியாவிடை வைபவத்தில் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய திரு பெருமாள் சிவக்குமார் இன்று இரவு தெரிவித்தார்.
அக்கரைப்பற்று நீதிமன்றிலிருந்து இம்மாதம் 15 ந் திகதி முதல் திருமலை நீதிமன்றுக்கு,இடமாற்றம் பெற்றுச் செல்லும், அக்கரைப்பற்று கௌரவ நீதிபதிக்கான பிரியாவிடை வைபவம் இன்று இரவு அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஸ்ட பிரதித் தலைவர், எஸ்.எம்.ஏ.கபுர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அக்கரைப்பற்று ,.கல்முனை சட்டத்தரணிகள் கலந்து தமது நினைவலைகளை இரை மீட்டினர்.
Post a Comment
Post a Comment