(க.கிஷாந்தன்)
மத்திய மலைநாட்டில் நுவரெலியா, இராகலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா (07.02.2020) அன்று வெள்ளிக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
01.02.2020 சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 5ம் திகதி மற்றும் 6ம் திகதி எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 07.02.2020 அன்று காலை மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
ஆலய தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா பிரதேச சபை தலைவர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்போது உழங்கு வானூர்தி மூலம் மலர்கள் தூவப்பட்டது.
மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை மேலும் குறிப்பிடதக்கது
Post a Comment
Post a Comment