அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் பக்கமாகச் சென்ற மோட்டார் சைக்கிளும், பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த நெல்லு லொறியும், இன்று மாலை 2.30 அளவில் காஞ்சிரங் குடாவில், மோதியது.
குறித்த விபத்தில்,பொட்டுக்கல்,ஹிதாயபுரம்,பொத்துவில் 20 என்ற முகவரியைச் சேர்ந்த,நெய்னா முஹம்மது படு காயமடைநத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.
அக்கரைப்பற்று பதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் , குறித்த ஜனாசாவை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டதுடன், மரண விசாரணைகளை நடத்தினார்.பிரேதப் பரிசோதனையின் பின்னர், குறித்த ஜனாசாவை உறவினர்களிடம் ஒபபடைக்குமாறும் வைத்தியாசலை அத்தியட்சகரைப் பணித்தார்.
திருக்கோவில் பொலிசார் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.
Post a Comment
Post a Comment