மின்னணு நுழைவுச் சீட்டு




யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வௌியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார இதனை குறிப்பிட்டிருந்தார்.

இன்று (05) முதல் இணையத்தின் ஊடாக இந்த நுழைவுச் சீட்டு வௌியிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிக்கும் போது ஏற்படும் அதிக நெரிசலை குறைத்துக் கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் குறித்து நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என எம்.ஜீ.சி.சூரிய பண்டார மேலும் தெரிவித்தார்.