இராணுவம் தலையீடு; அரிசி மாஃபியா உடைகின்றது




கடந்த இரண்டு வாரங்களில் இராணுவத்தினர் தலையீடு செய்து, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக சுமார் 33 இலட்சம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்ய உதவியுள்ளனர்.
நாட்டில் உள்ள அரிசி மாஃபியாவை இல்லாது செய்யும் நோக்கில் இராணுவம் இந்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள இராணுவ தலைமையகங்கள் தலையீடு செய்து  நெல் கொள்வனவுக்கு உதவி செய்துள்ளன.
நெல்லுக்கு உத்தரவாத விலையை பெற்றுக்கொடுத்து விவசாயிகள்  அதிகபட்ச விலையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 38 களஞ்சியசாலைகள் இராணுவத்தினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.