(நூருல் ஹுதா உமர்)
பொதுத்தேர்தல் நெருங்கிவரும் இக்காலகட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் தமது பாராளுமன்ற தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டு இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை பிரதேச பொதுமக்களுக்கான தொடர்பு காரியாலயம் இன்று (01) சனிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க அவர்களின் இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான ஏ.ஆர்.எம். றபீக் (தௌபீக்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் பல பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு கட்சியின் அங்கத்துவமும் இந் நிகழ்வில் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அட்டாளைச்சேனை பிரதான காரியாலயமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச முக்கியஸ்தர் எஸ்.எல்.ஏ.றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்காரியாலய திறப்பு விழாவுக்கும் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மத போதகர்கள், முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment
Post a Comment