(ஏறாவூர் நஸீர்)
தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கொழும்பு செல்லும் வழியில் ஏறாவூர் நகரசபைக்கும் சமூகமளித்து தவிசாளருடன் சினேக பூர்வ கலந்துரையாடலை நடாத்திவிட்டு சென்றார்.
இச் சந்திப்பு அரசியல் சாயம் பூசப்பட்டதாக இருக்கவில்லை.
மாறாக கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் முஸ்லீம் பிரதிநிதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? என்ற கருத்துக்கள் பறிமாறப்பட்டதோடு, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருக்கின்ற பிரதேச வாதங்களை களைந்து, நமது சமூகத்தின் நலமே முக்கியமென கருதி வேட்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு போட்டியிடவைப்பது சிறப்பானதென்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டு பிரயாணத்தை தொடர்ந்தார்.
Post a Comment
Post a Comment