நியமனம்




நாடாளுமன்ற கோப் குழு தலைவராக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு இவர் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இதுதொடர்பான கூட்டத்தில் அரச கணக்குக்குழு மற்றும்  கோப் குழுவுக்கான புதிய தெரிவுகளும் இடம்பெற்றன.
இதன்போது, அரச கணக்காய்வு குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவுசெய்யப்பட்டார்.