காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், விமானம் டெக்யாக் மாவட்ட பகுதியை கடந்தபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போதுவரை விவரங்கள் ஏதும் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment