#ஜனாசா “ஏயாரெம் ஜிப்ரி, இலங்கை வானொலியின் ஆளுமைத் திறன் கொண்ட ஒலிபரப்பாளர்” மறைவு




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
கல்முனையைப்  பிறப்பிடமாகவும், சரிக்கமுல்லையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளர்  ஏ.ஆர்.எம். ஜிப்ரி  நே்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார் என்பதை இதயம் கனத்து அறிவிக்கின்றோம்.

இலங்கையின் ஒலிபரப்புக் கலை வராலாற்றில், ஏயாரெம் ஜிப்ரி எனும் ஆளுமை ஒரு அட்சய பாத்திரம்.

அவர்களின் ஜனாஸா பாணந்துறை, கொஸல்வத்தைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்ஷா அழ்ழாஹ் இன்று (21) மாலை மஹ்ரிப் தொழுகையை அடுத்து கல்முனையில் இடம்பெறும்.

கல்முனை ஜிப்பிரியின் பிறந்தகம். தந்தை அப்துர் ரஹ்மான். தாய் சுபைதா உம்மா. 1959 மே. முதலாம் திகதி இவரது பிறந்த தினம். ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவர் இவர்.

கல்முனை சாஹிராக் கல்லுாரியின் பழைய மாணவர்.குண்டசாலை விவசாய டிப்ளோமா பட்டாரி. கல்விமாணிப் பட்டதாரி.

இலங்கை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக, 1986ல் தெரிவானவானவர். மக்கள் குரல் ஜிப்ரிக்கு மகுடமானது.

விஞ்ஞானப் பட்டதாரியான ஆமீனைாவை கரம் பிடித்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி க்கு மின்ஹாஜ் மின்ஹாம் எனும் பிள்ளைகள் இருவர் உள்ளனர்.