நானுஓயாவில் தடம்புரண்டபு,கையிரதம்




(க.கிஷாந்தன்)
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று நானுஓயா மற்றும் பெரக்கும்புர ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 130 மைல் கல் இடத்தில் 26.01.2020 அன்று தடம் புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் புகையிரதம் நானுஓயா புகையிரத நிலையம் வரையும், மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் அம்பேவெல புகையிரத நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகையிரத நிலையங்களிலிருந்து பஸ்கள் மூலம் பயணிகளை மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.