திடீர் சோதனை




(க.கிஷாந்தன்)

தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதர்களினால் 21.01.2020 அன்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

நகரத்திற்கு செல்லும் மக்களின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

மக்களுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது.

50 மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை நிலையம் சேதனையிடப்பட்டதுடன் குறைபாடுகளுடைய வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன் போது பல வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சில பழுதடைந்த, மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

உணவகங்களில் சமைப்பவர்கள், பேக்கரி திண்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள் உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.

இதன்போது, 08 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்குத்தால் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

சோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டதுடன், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.