உங்கள் காணொளிகளை மக்கள் விரும்பிப் பார்க்கும் பட்சத்தில், உங்களால் யூடியூப் மூலம் நல்ல வருமானத்தைப் பெறமுடியும் என்பது உண்மைதான்.
21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்பம் பரபரவென வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பிறகு ராக்கெட் வேகம் பிடித்தது. இந்தியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், குறைந்த விலையில் டேட்டா கிடைக்கத் தொடங்கியது. இணையம் சார்ந்த சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நல்ல அளவில் உயர்ந்தது. இதில், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் நல்ல வளர்ச்சியைக் கண்டன. முக்கியமாக, இலவசமாகக் கிடைக்கும் யூடியூப்பில் பகிரப்படும் வீடியோக்கள், மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த யூடியூப் சேவை, 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வீடியோக்கள் பகிரும் தளமாகும்.
இதன் வளர்ச்சியைக் கண்டு, கூகுள் இதை வாங்கித் தனது அங்கமாக யூடியூப்பை மாற்றியது. அமேசானின் ஆய்வு நிறுவனமான அலெக்சா இன்டர்நெட்டின் (alexa internet inc.,) ஆய்வுப்படி, 2018-ம் ஆண்டில் கூகுளுக்கு அடுத்து மிகவும் பிரபலமான இணையதளமாக இருப்பது யூடியூப்தான். இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, ஒரு நிமிடத்திற்கு 500 வீடியோக்கள் என்ற அளவில் யூடியூபில் பதிவேற்றப்படுகின்றன. இதனால் வீடியோ உருவாக்கி பலரும் யூடியூபில் வருவாயும் ஈட்டத் தொடங்கிவிட்டனர்.
யூடியூபில் வருமானம் ஈட்ட, முதலில் நீங்கள் ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு கூகுள் அக்கவுன்ட் தொடங்கவேண்டியது அவசியம். இதை வைத்து யூடியூபில் சேனல் ஒன்றைத் தொடங்கமுடியும். அதற்குப் பிறகு உங்களுக்குப் பிடித்தவாறு யூடியூபில் வீடியோக்கள் பகிரலாம். உங்களுடைய காணொளிகளில் Copyright பிரச்னை இருந்தால், யூடியூப் நிறுவனம் உங்களுக்குத் தெரியப்படுத்திவிடும். பிறகு, Copyright உரிமையாளர் சம்மதித்தால் மட்டுமே உங்கள் காணொளியை யூடியூப் நிறுவனம் அனுமதிக்கும். இதற்கு, உங்கள் காணொளியின் வருமானத்தில் ஒரு பங்கை Copyright உரிமையாளரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லது வீடியோவை நீக்கவேண்டியதிருக்கும்.
உங்கள் யூடியூப் கணக்கின் செட்டிங்க்ஸில் உள்ள channel status and features என்பதை கிளிக் செய்தால் உங்கள் சேனல் பற்றிய அனைத்து விபரங்களும் வரும். அதில் Monetization என்பதை செலக்ட் செய்தால் மட்டுமே உங்களால் பொருளீட்ட முடியும். இதைச்செய்ய உங்கள் சேனல் ஆயிரம் சந்தாதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், கடந்த ஒரு வருடத்தில் உங்கள் சேனல் 4,000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றைச் செய்திருந்தால் யூடியூப் நிறுவனம் உங்கள் சேனலை ஆய்வுசெய்து, பின்னர் தனது யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் கீழ் இணைத்துக்கொள்ளும். இதற்குப் பின், உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். Monetization மூலம் யூடியூபின் விளம்பரங்கள் உங்கள் வீடியோக்களில் தோன்ற ஆரம்பிக்கும். இவை, கூகுளின் AdSense மூலம் வரும்.
வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம் காணொளியைப் பதிவேற்றிய சேனலுக்குக் கிடைக்கும்.
உங்களின் பார்வையாளர்கள் இதை ஸ்கிப் செய்தால் ஒரு சிறிய தொகையும், முழு விளம்பரத்தையும் பார்த்தால் ஒரு தொகையும், அந்த விளம்பரத்தை க்ளிக் செய்தார்கள் என்றால் ஒரு தொகையும் கிடைக்கும். இது, உங்கள் வீடியோவைப் பார்க்கும் பார்வையாளர்களின் பகுதியைப் பொறுத்து மாறலாம். உதாரணத்திற்கு, அமெரிக்கப் பார்வையாளர் உங்கள் வீடியோவில் வரும் விளம்பரத்தைப் பார்த்தால் வரும் தொகை, இந்தியப் பார்வையாளரிடமிருந்து வரும் தொகையைவிட அதிகமாக இருக்கும். இப்படி மொத்தம் வரும் வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம், காணொளியைப் பதிவேற்றிய சேனலுக்கு கிடைக்கும். மொத்தமாக உங்கள் சேனல் $100-க்கு மேல் வருவாய் ஈட்டிவிட்டால், அந்தத் தொகையை கூகுள் நிறுவனம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்திவிடும்.
தனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்? #DoubtOfCommonMan
Also Read

யூடியூபில் பதிவேற்றம் செய்வதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், உங்கள் காணொளிகளை யூடியூப் தானாக முன்வந்து நீக்கி விடும். தினசரி வீடியோக்கள் பதிவேற்றம் செய்பவர்களுக்கு சந்தாதாரர்கள் அதிக அளவில் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இவர்கள் அதிக வருமானத்தை ஈட்டக் கூடும். ஒரு லட்சம் சந்தாதாரர்களை வைத்திருக்கும் சேனலுக்கு சில்வர் பிளே பட்டன், ஒரு மில்லியன் சந்தாதாரர்களுக்கு மேல் இருந்தால் கோல்ட் பிளே பட்டன், பத்து மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டால் டைமன்ட் பிளே பட்டன் என அவ்வப்போது யூடியூப் அங்கீகார பரிசுகள் அனுப்பும்.
உங்கள் காணொளிகளை மக்கள் விரும்பிப் பார்க்கும் பட்சத்தில், உங்களால் யூடியூப் மூலம் நல்ல வருமானத்தைப் பெறமுடியும் என்பது உண்மைதான். யூடியூபிலும் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றன. ஆனால், தரமான வீடியோக்கள் உங்கள் சேனலில் இடம்பெறுமானால், மக்கள் நிச்சயம் உங்கள் பக்கம்தான்.

Post a Comment
Post a Comment