(க.கிஷாந்தன்)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 02.12.2019 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் இம்முறை பரீட்சைக்கு 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 ஆகும். மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு ஆகும்.
நாடு முழுவதிலும் உள்ள 4,987 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மலையகத்திலும் 02.12.2019 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் அட்டன், கொட்டகலை, ஆகிய பாடசாலை மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment