சிரமதான செயற்திட்டம்




(க.கிஷாந்தன்)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமையான சுத்தமான நாடு செயற்திட்டத்தில் 07.12.2019 அன்று நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட தலவாக்கலை நகரத்தில் காணப்படும் பஸ் தரிப்பு நிலையம், புகையிரத நிலையம், பொது மலசலகூடம், பிரதான நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள பிரதேசங்களை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான ருவான் பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான பணியில் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், பொது மக்கள், நகரில் அமைந்துள்ள சகல அரச நிறுவனங்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.