விபத்தில் இளைஞன் பலி




வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் இருந்த மாட்டுடன் மோதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா திசையில் பயணித்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 21 வயதுடைய கிருபாகரன் துஷாந்தன் எனும் நபர் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.