ஸ்ரீதேவி வாழ்க்கை புத்தகம் வெளியீடு




மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க விருப்பதாக அவரது கணவர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை புத்தகம் தயாராகி இருக்கிறது. பெங்குயின் நிறுவனம் இதற்கான பொறுப்பை ஏற்றிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்ரீதேவியின் புத்தக முகப்பை மட்டும் நடிகை வித்யாபாலன் வெளிட்டார். இந்நிலையில் மும்பையில் நடந்த விழாவில் ஸ்ரீதேவியின் வாழ்க்கை புத்தக்கத்தை கோச்சடையான் ஹீரோயினும் பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் வெளியிட்டார். இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.