கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குல அளவில் இன்று (06) காலை 8 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளத்தின் நீரேந்த பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்திற்கு நீர் அதிகளவு வருவதனால் நீர் மட்டம் 31 அடியாக உள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடு குளமான 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்து கொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே, இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.

-கிளிநொச்சி நிருபர் நிபோஜன்-
Post a Comment
Post a Comment