நோர்வூட்டில் தீ விபத்து




(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் 25.11.2019 அன்று 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பிரதேச பொது மக்கள், நோர்வூட் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.