ஆரையம்பதி,ஆறாத சோகத்தில்




ஆரையம்பதியில் குளத்தில் புதையுண்டு மூன்று சிறுவர்கள் மரணம்.இதில் ஒரு சிறுவனது சடலம் மீட்பு.
ஆரையம்பதி, திருநீற்றுகேணி பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைகாலம் மீன் பிடிப்பதற்காக சென்ற 5 இளைஞர்களில் மூன்று பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சேற்றில் சிக்குண்டபோது ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று மூவரும் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற இந்த பரிதாப சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.