நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு,ஜனாதிபதிக்கு உண்டு




(க.கிஷாந்தன்)
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்று நாட்டின் அணைவருக்கும் ஜனாதிபதி ஒருவரே. நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அணைவருக்கும் பொதுவானவரே. எனவே இந்த நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. அதனை அவர் சரியாக செய்வார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தல் காலத்தின் பொழுது பல்வேறு பிரிவுகளாக பிரிந்து அரசியல்வாதிகளும் நாட்டு மக்களும் செயல்படுகின்றார்கள். இது எந்த தேர்தல் வந்தாலும் பொதுவான விடயம் ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களுக்கு விரும்பியவர்களுக்கு வாக்களிக்க முடியும்.
தேர்தலின் பின்பு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் இவர்கள் அணைவரும் நாட்டில் அணைவருக்குமே பொதுவாக சேவை செய்ய வேண்டும். அதுவே ஜனநாயகத்தினுடைய பன்பு.
தேர்தல் காலங்களில் ஒருவருக்கு ஒருவர் விமர்சிப்பது கருத்து தெரிவிப்பது நடைமுறையே எல்லா நாடுகளிலும் இந்த நடைமுறையே இருக்கின்றது. தேர்தலின் பின்பு அணைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டியது எல்லோருடைய பொறுப்பாகும்.
இந்த புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நல்ல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.
எங்களை பொருத்தளவில் எங்களுடைய மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அதனை யார் செய்தாலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம். நாங்கள் நல்ல வேலைகள் செய்யும் பொழுது காலை பிடித்து இழுப்பதோ, முட்டு கட்டை போடுவதோ தேவையற்ற விமர்சனங்களை கூறுவதோ எங்களுடைய வேலை அல்ல.
அதற்கு ஒத்துழைப்பு வழங்கி எங்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையம் பெற்றுக்கொடுப்பத எங்களுடைய கடமையாகும்.
மலையக மக்களை பொருத்தவைரயில் அவர்களுடைய சம்பள பிரச்சினை, வீட்டு பிரச்சினை, காணி பிரச்சினை, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எங்களுடைய காலத்தில் நாங்கள் கூடுமான வரை அவற்றை நிவர்த்தி செய்வதற்காக எங்களை அர்ப்பணித்து வேலை செய்தோம். அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு இந்த மக்கள் சுபீட்சமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.