பஜனை நிகழ்வு




(க.கிஷாந்தன்)
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடத்தில் கடந்த காலங்களில் அறுகி வரும் கலைகளுக்கு உயிர் ஊட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் முயற்சியால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக இந்தியா சென்னையிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள நவ காண பஜான் மண்டலி குழுவினரின் அணுசரனையில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட ஹோல்புறூக் லக்ஷிமி கலாச்சார மண்டபத்தில் பஜனை நிகழ்வு ஒன்று 29.11.2019 அன்று இடம்பெற்றது.
இதில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட சென்னையிலிருந்து வருகை தந்த நவ காண பஜான் மண்டலி குழுவின் தலைவர் வீணா ரஜேஷ் மந்தேர், அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.