அக்கரைப்பற்று மாநகர ஆணையர், சலீத் (சி்சி) உட்டபட ஊழியர்களுக்கும் நன்றிகள்




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இன்று மாலை தொடர்ந்தேர்ச்சியாகப் பெய் மழை அக்கரைப்பற்றையும் வெள்ளக் காடாக்கியது.

அக்கரைப்பற்று பிரதான வீதி, அஸ்ஸிராஜ் மகா வித்தியால வீதியிலிருந்து பொலிஸ் நிலையம் வரை, அக்கரைப்பற்று -06ம் குறிச்சியென்று பல்வேறு வீதிகள்,வீடுகள் போன்றவற்றில் வெள்ளம் புகுந்து விளையாடியது.

இது தொடர்பாக ஆணையாளருடன் தொடர்புற்று நிலைமையினை சொன்னேன். ”உடனடியாக CC சலீத் இனைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டினார்”

சலீத்திடம்  இது பற்றிப் பேசினேன். ”ஊழியர்கள் பலரும் வீடு செ்னறு விட்டார்கள் எனவும்,அவசரமாகச் செய்வதற்கு JCB சாரதியிடம் பேசி முடிவு சொல்வதாக” என்னிடம் சொன்னார். பின்னர் தொடர்புற்றார். ”தற்காலிக JCB சாரதியின் வீடு வீதியெங்கும் வெள்ளம் என்பதாகவும், இருப்பினும் அவரைப் பணிக்கு வருமாறு அழைத்ததாகவும்” கூறினார்.

மாலை 5 மணியளவில் JCB எனது வீடு நோக்கி வந்தது. வெள்ள நீர் வழிந்தோடத தடையாக இருக்கும் இடங்களைக் காட்டுவதற்காக JCB இல் ஏறிச் சென்று  பொலிஸ் நிலையத்துக்குப் பின்னால உள்ள இடங்களை அடையாளங் காட்டினேன். சாரதி விவேகமாகச் செயற்பட்டார், உடன் உதவியாளரும் நானும் அமர்ந்து இன்னும் சில இடங்களைக் காட்டினோம். அந்த இடங்களும் தோண்டப்பட்டு விட்டது. வெள்ள நீர் முன்னையதை விட வேகமாக ஓடி வடிகின்றது.

களத்தில் மற்றுமொரு வாகனத்தில் பயணித்த சலீத்(சி.சி) உட்பட அக்கரைப்பறறு ஊழியர் படையணி புறப்பட்டுள்ளது, அக்கரைப்பற்று 06ம் குறிச்கை நோக்கி.

வெள்ளத்தால் பள்ளமாகிய உள்ளங்களைப் பரிதவிக்க விடாமல் பணி புரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்!