வைரஸ் காய்ச்சல்




வைரஸ் காய்ச்சல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று மதியம் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் நேற்றைய தினம் கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

அதன்படி, சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடம், மேலாண்மை பீடம், பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மேலும் சில மாணவர்கள் மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.