#இர்சாத்.
கல்வியமைச்சினால், ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி பெற்றோர்களையும் அழைத்து பரிசளிபபு விழாவினை நடத்துமாறு, சுற்று நிருபம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அக்கரைப்பற்றுக் கல்வி வயலயத்திலுள்ள அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் கனிஸ்ட கல்லுாரியில் 5ம் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களிடத்தில் பணம் அதீதமாக அறவிடப் படுவதாகவும் அதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாமெலாமெனவும், பெற்றோர்கள் ஆராய்ந்து வருவதாகத் தெரிய வருகின்றது. மேலும், அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் கனிஸ்ட கல்லுாரியில் புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவரிடமிருநது ரூபா 15 000/= கோரப்பட்டுள்தாகவும் எமது செ்ய்தியாளரிடம் புகாரிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று அஸ்ஸாஹிராவில் ஒவ்வொரு மாணவர்களிடத்திலுந்தும், பரிசளிப்பு விழாவுக்கென ,ரூபா 1000/= அறவிடுவதாகவும், அதனைக் கொடுக் முடியாத நிலையில் உள்ள பெற்றோர்கள் உள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று கரையோரப் பாடசாலைகளில் பரிசளிப்பு விழாவை நடத்துவதை, நினைத்துக்கூடப் பார்கவே முடியாத வறுமைக் கோட்டின் கீழ் பெற்றோர்கள் வாழ்வதாகவும் எமது புலனாய்வுச் செய்தியாளர் அறிவிக்கின்றார்.
பரிசளிப்பு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.மாணவர்களின் திறமை பாராட்டப்படவும் வேண்டும்.அதற்காக, குறித்த பாடசாலையில் அந்த பரிசளிப்பு விழாவினை மிகவும் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியுமெனவும் அந்தப் பரிசளிப்பு விழாககளை நடத்த அரங்களை வாடைக்கு அமர்த்தி அதில் அழகு பார்க்க பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றதானது ஏற்றுக் கொள்ப்பட முடியாததொன்று.
Post a Comment
Post a Comment