அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய பரிசளிப்பு விழா




அக்கரைப்பற்று,அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலயப் பரிசளிப்பு விழா,-2018 -2019 நே்றறுக் காலை இடம்பெற்றது.

ஆண்கள் வித்தியாலத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2018.2019 காலப் பகுதியில் சித்தியுற்ற மாணவர்கள், மற்றும் கலை கலாச்சார, விளையாட்டுப் போட்டிகளில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள, இன்னோரன் பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அக்கரைப்பற்று  ஆண்கள் வித்தியாலய அதிபர் நயீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மதுல்லாஹ்.மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள  உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.