அககரைப்பற்று சாகாம வீதியில், வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், போக்கு வரத்துக் கடமையில் நின்ற பொலிசாரை மோதிச் சென்றுள்ளது. குறித்த விபத்தில் கடுங்காயமுற்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்நதவரும், அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதியைச் சேர்ந்தவருமான பொலிஸ் கொன்ஸ்டபிள் லாபிர்- 52 வயது மரணமடைந்துள்ளார்.
நேற்று பின்னிரவில், அக்கரைப்பற்றுப் பொலிசார் போக்குவத்துக் கடமையில் சாகாம வீதியில் பணிபுரிந்துள்ளனர். அப்போது அதிக வேகத்தில் வந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். அப்போது, நிறுத்தாமல் சென்ற சாரதி,கடமையில் இருந்து பொலிசாரைத் வேகமாகச் சென்று மோதி விட்டு, மோட்டார் சைக்கிளையும் விபத்து நடந்த இடத்தில் கைவிட்டுத் தப்பியோடிள்ளனர்.
குறித்த விபத்தினால் கடுங்காயமுற்ற பொலிஸ் அதிகாரி லாபீர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,பின்பு கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளார். அவரது ஜனாசா தற்போது கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றுப் பொலிசார் குறித்த விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளோரைக் கைது செய்துள்னர்.
Post a Comment
Post a Comment