மா வீரர் தினம் கொண்டாடத் தடை




யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று (26 .11 .2019) மற்றும் நாளை (27.11.2019) ஆகிய இரு தினங்களும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பு மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்களால் அனுசரிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கார்த்திகை 27ம் திகதி நாளை புதன்கிழமை வருவதால், மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுந்தன. இந்நிலையில் யாழ் பல்கலைக் கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமி பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் நாளையும் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.