(க.கிஷாந்தன்)
பலாங்கொடை பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொகவந்தலாவ – அட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி வீதியை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
24.11.2019 அன்று காலை 5.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியில் குறுக்கே சென்றமையினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியின் இருந்த பெறுமதியான மரக்கறி வகைகள் சேதமமைந்துள்ளதாகவும், எனினும் சில மரக்கறி வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment