இந்நாட்டு வறுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவை எனது ஆட்சியின் கீழ் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கேகாலையில் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சமுர்த்தி பயனாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாவினை பெற்றுக் கொடுக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.
அரச சேவையில் உள்ள 14 இலட்சம் பேருக்கு குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், 14 இலட்சம் சமுர்த்தி குடும்பங்கள் உள்ளன. அப்படியானால் அவர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க முடியாதா?
நாம் 5 வருட காலப்பகுதியில் இந்த கொடுப்பனவை வழங்கி ஆய்வொன்றினை மேற்கொண்டு சமுர்த்தி பயனாளர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி சமுர்த்தியில் இருந்து வௌியேறுவோம் என்றார்.

Post a Comment
Post a Comment