இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு வழங்கிய சிறந்த பங்களிப்புகளுக்காக Figo Holidays நிறுவனம் 26 ஆவது உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் (WORLD TRAVEL AWARDS) நிகழ்வில் “இலங்கையின் முன்னணி சுற்றுலா முகவர் நிறுவனம் 2019” என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
வியட்நாமின் Phu Quoc இல் அமைந்துள்ள வின்பேர்ள் மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி சனிக்கிழமைநடைபெற்ற உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகள் - ஆசியா மற்றும் ஓசியானியா கலா - 2019' விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கல் நிகழ்ச்சித் திட்டமானது உலகளாவிய சுற்றுலாத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க கௌரவத்தை வழங்கும் ஒரு நிகழ்வாகும்.
Figo Holidays (Pvt) Ltd, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி சுற்றுலாப் பயண வழிகாட்டி நிறுவனமாகும்.
அத்துடன் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயண வழிகாட்டிகள் சங்கம் (SLITO) மற்றும் பசுபிக் ஆசிய சுற்றுலா சங்கத்தின் (PATA) இலங்கைப் பிரிவு ஆகியவற்றின் அங்கத்துவ நிறுவனமுமாகும்.
Figo Holidays பிரித்தானியா, துருக்கி, மலேசியா, இந்தியா, மாலைதீவு, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருகின்றது.
அத்துடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில் பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளிலும், இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் பங்குபற்றியும் உள்ளது.
வாடிக்கையாளர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்யும் ஆர்வத்துடன் திறமையான பணியாளர்களின் உறுதியான பங்களிப்புகளினால் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நம்பிக்கையை Figo Holidays நிறுவனத்தினர் வென்றுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளிலுள்ள தன்னுடைய சுற்றுலாப் பயண முகவர்கள் ஊடாகவும், பிரதிநிதிகள் ஊடாகவும், சமூக வளைத்தளங்கள் வாயிலாகவும் தமது வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்றனர்.
2018 இல் இடம் பெற்ற இலங்கையின் சுற்றுலாத்துறை விருது (Sri Lanka Tourism Award 2018) வழங்கலில் பயண மற்றும் சுற்றுலா வழிகாட்டி வகையின் கீழும் உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகளின் (WORLD TRAVEL AWARDS) கீழ் இலங்கையின் முன்னணி பயண முகவராகவும் பெயரிடப்பட்டமை Figo Holidays இன் சாதனைகளில் சிலவாகும்.
அந்த வகையில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது Figo Holidays நிறுவனம் உலகளாவிய சுற்றுலாத்துறை விருது (WORLD TRAVEL AWARDS) வழங்கலில் 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முன்னணி பயண முகவர் விருதை வென்று நற்பெயரைச் சம்பாதித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.
தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இன்றி இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று Figo Holidays உறுதியாக நம்புகிறது.
Figo Holidays தனித்துவமான, இன்பகரமான, மற்றும் திருப்திகரமான பயண அனுபவங்களை வழங்கும் முதல் மற்றும் சிறந்த நிறுவனமாக இருக்க முயற்சிக்கிறது. அத்துடன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தரமான சுற்றுலா சேவைகளை வழங்க பங்காளிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.
சுற்றுலா பயணம் செய்வதற்கான சிறந்த இடம் என இலங்கையின் நற்பெயரை உலக அரங்கில் உயர்த்துவதற்கு Figo Holidays உறுதிபூண்டுள்ளது. Figo Holidays தொடர்பில் மேலும் அறிய www.figoholidays.com எனும் இணையத்தளத்திற்கு விஜயம் மேற்கொள்ளவும்.
Post a Comment
Post a Comment