வெள்ளைப் பிரம்பு தினம்




பாறுக் ஷிஹான்

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில்  காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது.

செவ்வாய்க்கிழமை(15) காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விழிப்புலனற்றோரினால் விழிப்புணர்வு பேரணியொன்று இடம்பெற்றது .

இப்பேரணியானது காரைதீவு பிரதேச செயலகத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த பேரணி திருமால் சமூக சேவை வீதியினுடாக விபுலாந்தா கலாசார மண்டபத்தை வந்தடைந்தது.

பின்னர் விபுலானந்த கலாசார மண்டபத்தில் விழிப்புலனற்றோரின்கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேறின இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஜி.சுகுணன் மற்றும் கெளரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் இமட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்எஸ்.அருள்மொழி மற்றும் விசேட அதிதியாக  ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதைவராஜா மற்றும் சர்வ மதத் தலைவர்கள், விழிப்புணர்வற்ற சங்கங்கள், விழிப்புணர்வற்ற சங்க அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 மேலும் விழிப்புணர்வற்றவர்களது கலை நிகழ்வுகளும் , விழிப்புலனற்றோர் கெளவிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது