சம்மாந்துறையில்,பயிற்சி பட்டறை




இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சம்மாந்துறை வலயகல்வி இணைந்து சிறுவர் உரிமை சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்றினை செவ்வாய்க்கிழமை(15) காலை நடாத்தியது.

கல்முனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சுமார் 50க்கும் அதிகமானோர் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

இதன் போது வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் ஏனைய அதிதிகளாக  சம்மாந்துறை வலயக்கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.நிதர்ஷினி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சமூக உளவியல் உத்தியோகத்தர் எம்.ஹமீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.