மழைக் காலநிலை






இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்பமானது தற்போது வலுவடைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை முக்கியமாக வடக்கு கிழக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் இன்று (25ம் திகதி) இரவு முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் சில பிரதேசங்களில் முக்கியமாக கிழக்கு வடக்கு வடமத்திய ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் அனேக பிரதேசங்களில் பிற்பகல் 01.00 மணிக்கு பின்னர் மழை அளவு இடியுடன் கூடிய மழை காணப்படும்.

மத்திய சப்ரகமுவ வடமத்திய ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களைப் பொரறுத்தவரையில் இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்பம் காரணமாக இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்கள் பலவற்றிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

முக்கியமாக அம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு திருகோணமலை ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் இதயங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதுடன் விகடங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

எனவே மீனவர் சமூகம் மற்றுடம் கடல்சார் தொழிலாளர்கள் தனது கடல் நடவடிக்கையின் போது மிகவும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏனைய கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்தக் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதற்கு காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்திலும் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.