அக்கரைப்பற்றில் அண்ணன் அழகையாவுக்கான கெளரவிப்பு




அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் சுமார் 40வருட காலமாக உடை கழுவி, வெளுத்து கொடுக்கும் சலவைத் தொழில்  நற்பணியை செய்து கொண்டு வருகின்ற அண்ணன் அருணாச்சலம் அழகையா இன்று (18) வெள்ளிக்கிழமை மாலை அக்கரைப்பற்று மண்ணில் வைத்து சில சமூக ஆர்வலர்களால் பாராட்டி கெளரவிக்கப்படடார்.

(அண்ணன் அழகையாவின் புதல்வி சட்டத்தரணி தாட்சாயினி அழகையா)

அக்கரைப்பற்று SFH நிறுவன ஏற்பாட்டில் சமூக ஆர்வலர் மர்சூக் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற சிரேஸ்ட நில அளவையாளர் முஹீதீன் பாவா, மௌலவி சியாத் (சலபி) ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் பேரின்பம் ஆகியோர் முன்னிலையில் இடம் பெற்றது.

அக்கரைப்பற்றின் பல் துறைசார் வல்லுனர்கள் அண்ணஅழகையாவின் சேவையினைப் பாராட்டிக் கௌரவித்ததுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழியும் வழங்கினர்.