அத்தியாவசிய விடயங்களை தவிர்;த்து இலங்கைக்கு சுற்றுலா செல்வதனை தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டுமாயின், கொழும்பிலுள்ள தமது தூதரகத்தின் தொலைபேசி இலக்கமான 0094 112-301-601 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி பயணத்தை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.
அவ்வாறு இல்லையாயினும், தமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் தொலைபேசி இலக்கமான 00971 800-444-44 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி விஜயத்தை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment