கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பாலமொன்றை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெறும் தருணத்தில் ரயிலில் சுமார் 250 வரையான பயணிகள் இருந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த ரயில் பாலத்தை விட்டு கீழே வீழ்ந்திருக்கும் பட்சத்தில் பாரிய உயிரிழப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் ஊடாக ரயில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன
Post a Comment
Post a Comment