மரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்




(க.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை பேரம் தோட்டத்தில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமாகியுள்ளது. இதில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனினும், மேற்படி மரத்தை அப்புறபடுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.