#100women “மலட்டுத்தன்மை பெண்களுக்கு மட்டும்தானா?”




மலட்டுத்தன்மை என்பது பெண்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களின் மலட்டுதன்மை பற்றி நவீன ஆய்வுகள் நடத்துவதன் மூலம் இந்த அநீதியை, சமத்துவமின்மையை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும் என்று ஸ்காட்லாந்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் சாரா மார்டின்ஸ் தெரிவித்தார்.
பிபிசியின் 100 பெண்கள் (2019) நிகழ்வில் ஆண்களின் மலட்டுத்தன்மை என்ற தலைப்பில் ஆண்களின் மலட்டுத்தன்மை குறித்த கட்டுக் கதைகளை உடைத்து பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
பெண்களோடு இணைத்து பேசப்படும் மலட்டுத்தன்மை என்ற சுமையை பெண்கள் மட்டுமே சுமந்து வருகின்றனர். ஆனால், ஆண் மலட்டுதன்மையில் அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார் ஆராய்ச்சியாளர் சாரா மார்டின்ஸ் டா சில்வா.
சமத்துவமின்மையையும், பெண்களின் மலட்டுத்தன்மை தொடர்பான சுமையையும், அறிவியல், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புத்தாக்கம் மூலம் சரிய செய்ய முடியும் என்கிறார் சாரா மார்டின்ஸ்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து, தந்தையாக ஆண்கள் தடுமாறும் நிலைமையை சுட்டிக்காட்டி அவர் பேசினார். இதனை தடுக்கும் நோக்கில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.