உலகின் பழமை வாய்ந்த பயண நிறுவனம் #Thomas Cook முடிவுக்கு வருகின்றது




#லண்டன்:
உலகின் பழமையானதும், மற்றும் மிகப்பெரிய சுற்றுலா மற்றும் பயண நிறுவனமுமான (178 வயது) தாமஸ் குக் முடிவுற்றாதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் வர்த்தகம், விமானச்சேவை உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வந்துள்ளன.இதனால், உலகமெங்கிலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த, 21,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்த திடீர் நடவடிக்கையின் விளைவால், உலகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்றனர். அதில் பலரது டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. இதில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பிரிட்டிஷ் குடிமக்கள். தாமஸ் குக் மூலம் தங்கள் பயணம், ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணங்களை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகள் இவர்கள்.