நில்வளா கங்கையின் நீர்மட்டம், உயர்வு




தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், கங்கையின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.