காத்தான்குடி மாணவி சீனா நப்ரின் வியட்நாம் செல்லவுள்ளார்




காத்தான்குடி மாணவி தேசிய கணித விஞ்ஞான ஒலியம்பியட் போட்டியில் சாதனை; சர்வதேச போட்டிக்காக வியட்நாம் செல்லவும் தகுதி
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலியம்பியட் போட்டியில் பங்கு பற்றிய காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியைச் சேர்ந்த முகம்மட் சபீக் சீனா நப்ரின் என்ற மாணவி 6வது இடத்தினைப் பெற்று சாதணை படைத்துள்ளதுடன் சர்வதேச போட்டிக்காக வியட்நாம் செல்லவும் தகுதி பெற்றுள்ளார்.
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 6ம் வகுப்பில் கல்வி கற்கும் இம்மாணவி பாடசாலையினூடாக கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்வாண்டுக்கான தேசிய விஞ்ஞான ஒலியம்பியட் போட்டியில் பங்கு பற்றி இந்த சாதணையைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டிக்காக 108 மாணவர்கள் தோற்றியதில் இம் மாணவி 6வது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மாணவர்களுக்குள் இம் மாணவி மாத்திரமே சர்வதேசப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எதிர் வரும் 26.11.2019 அன்று இம் மாணவி வியட்நாம் செல்லவுள்ளார்.
இலங்கையிலிருந்து வியட்நாமில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்குபற்றுவதற்காக மூன்று சிங்கள மாணவர்களும், இரண்டு தமிழ் மாணவர்களும் ஒரு முஸ்லிம் மாணவியுமாக மேற்படி காத்தான்குடி மாணவியும் தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடிக்கும் முழு கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி மாணவி முகம்மட் சபீக் என்பவரின் மகளும் நசீலா ஹாட்வெயர் உரிமையாளர் அக்பர் ஹாஜியாரின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.