சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்றில் ஒர் ஏடு




இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 93 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த எட்டரை மாதங்களில் 6695 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு செயற்பாடுகளை பரிமாற்றுவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு 1778 வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 1533 விடுதலை உத்தரவு வழக்குகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், 4924 சிறுவர் துஷ்பிரயோகம் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், 5169 குற்றவியல் வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 10093 வழக்குகளை நிறைவு செய்ய கடந்த எட்டரை மாதக் காலப்பகுதியில் முடிந்ததாக நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இது சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வரலாற்று சாதனை என அவர் சுட்டிக்காட்டினார்.